நாதர் அல் - தகாபி
நாதர் தகாபி (ஆங்கிலம்: Nader Al-Dahabi ) என்பவர் ஜோர்தானிலுள்ள அம்மானில் 1946 இல் பிறந்த ஜோர்தானிய அரசியல்வாதி ஆவார். இவர் 2007 நவம்பர் 25 முதல் 2009 டிசம்பர் 14 வரை பிரதமராக இருந்தார். மாரூப் அல் பகித் பதவி விலகியதைத் தொடர்ந்து அவர் பதவியேற்றார், பாராளுமன்றத் தேர்தல்களுக்கு சில நாட்களுக்குப் பின்னர் இஸ்லாமியவாதிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு ஆதரவான வேட்பாளர்களால் தோற்கடிக்கப்பட்டனர். 2009 டிசம்பர் 9 அன்று, அவர் பதவி விலகி இரண்டாம் அப்துல்லாவிடம் அரசாங்கத்தை ஒப்படைத்தார். 1946 அக்டோபர் 7 இல் அம்மானில் பிறந்த நாதர் தகாபிக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உண்டு. அவரது சகோதரர் முகம்மது, முன்னாள் பொது புலனாய்வு இயக்குநரகத்தின் தலைவராவார். 2012 ல் 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர் .
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
[தொகு]தகாபி 1964 இல் அம்மானில் உள்ள அல் குசைன் கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர் அவர் ராயல் ஜோர்தானிய விமானப்படையில் சேர்ந்தார். ராயல் ஜோர்தானிய விமானப்படையில் சேருவதில் நாதர் வெற்றி பெற்று, உதவித்தொகையுடன் கிரீசிக்கு அனுப்பப்பட்டார். அங்கு அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.. 1969 ஆம் ஆண்டில் கெலெனிக் விமானப்படை அகாதமியிலிருந்து வான்வெளிப் பொறியியலில் பட்டம் பெற்றார். ஐக்கிய இராச்சியத்திலுள்ள கிரான்ஃபீல்ட் தொழில்நுட்ப நிறுவனத்தில் வான்வெளி பொறியியலில் முதுகலை பட்டம் பெற்றார். 1987 இல் ஆபர்ன் பல்கலைக்கழகத்தில் (அலபாமா, அமெரிக்கா) பொது நிர்வாகத்தில் பட்டம் பெற்றார்.[1]
பதவிகள்
[தொகு]1964 ஆம் ஆண்டில் ராயல் ஜோர்தானிய விமானப்படையில் ஒரு பயிற்றி மாணவனாகச் சேர்ந்தார், பின்னர் 1992 முதல் 1994 வரை தளவாடங்களுக்காக ராயல் ஜோர்தானிய விமானப்படையின் உதவி தளபதி பதவியைப் பெற்றார்.[1] அவர் 1994 முதல் 2001 வரை ராயல் ஜோர்தானியன் விமானப்படையின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார்,[2] மற்றும் 1994-1995 வரை அரபு விமான ஊர்திகளின் அமைப்பின் தலைவராக பணியாற்றினார்.[1] தகாபி 1994 முதல் ராயல் ஜோர்தானிய பால்கான்சு வாரியத்தின் தலைவராகவும், ராயல் ஜோர்தானிய அகாடமியின் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.
1996-1997 வரை பன்னாட்டு வான் போக்குவரத்து சங்கத்தின் தலைவராக பணியாற்றிய முதல் அரபு ஆவார், மேலும் 1995-1998 வரை பன்னாட்டு வான்வழிப் போக்குவரத்து நிறுவனங்களின் வணிகச் சங்க ஆளுநர் குழுவின் உறுப்பினராக பணியாற்றினார். 2001 ஆம் ஆண்டில் பிரதமர் அலி அபு அல்-ராகேப் அவர்களால் போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டார். மார்ச் 2004 இல், தகாபி அகாபா சிறப்பு பொருளாதார மண்டல ஆணையத்தின் (ஆஸெஸா) தலைமை ஆணையராக நியமிக்கப்பட்டார், இது 2001 ஆம் ஆண்டில் செங்கடல் நகரமான அகாபாவில் நிறுவப்பட்ட ஒரு சிறப்பு பொருளாதார மண்டலமாகும்.
நவம்பர் 25, 2007 அன்று, அவர் பிரதமராகவும் பாதுகாப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டு நான்கு பெண்களுடன் முதல் ஜோர்டானிய அரசாங்கத்தை அமைத்தார். தகாபியின் சகோதரர் மொகமட் ஜனவரி 2008 வரை பொது புலனாய்வு இயக்குநரகத்தின் (ஜிஐடி) தலைவராக இருந்தார்.
கால்பந்து
[தொகு]பிரதம மந்திரி தகாபி வெளிப்படையாக ஏதென்ஸ் கால்பந்து அணியின் தீவிர ரசிகரவார். மே 2008 இல், அவர் நிகோலஸ் லிபரோபௌலோஸ் ஜெர்சி எனற கால் பந்தாட வீரரை அம்மானுக்கு உத்தியோகபூர்வ வருகையின் போது கிரேக்க பாதுகாப்பு அமைச்சரிடமிருந்து பரிசாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது. .
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-06-05. பார்க்கப்பட்ட நாள் 2019-11-22.
- ↑ http://news.bbc.co.uk/2/hi/middle_east/7108151.stm